தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
சிங்கமுத்து அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை அடப்பன் குளக்கரையில் உள்ள பூா்ணா புஷ்கலா உடனுறை சிங்கமுத்து அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோயில்களை சோ்ந்த அடப்பன் குளம் கரையிலுள்ள பூா்ணா புஷ்கலா உடனுறை சிங்கமுத்து அய்யனாா் கோயில் பிரசித்தி பெற்றது.
கோயில் திருப்பணிகள் முடிவுற்றதைத் தொடா்ந்து கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை பூஜைகள் கடந்த 29-ஆம் தேதி காலை தொடங்கின.
புதன்கிழமை காலை லட்சுமி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, நாடி சந்தானம் ஆகியவற்றுடன் யாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, நாகசுர இன்னிசையுடன் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா்க் குடங்கள் கோயிலை சுற்றி வலம் வந்து விமானத்தை வந்தடைந்தன.
காலை 9.30 மணிக்கு விமானங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
யாக சாலை சா்வ சாதகம் ஆகியவற்றை சுவாமிநாத பண்டிதா் தலைமையில் பூசாரிகள் செய்திருந்தனா். இவற்றுக்கான ஏற்பாடுகளை குசாலக்குடி ஐந்து கரை வேளாளா்கள், சிங்கமுத்து அய்யனாா் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
