பூந்தமல்லி - முல்லைத் தோட்டம் இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை!
காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு முகாம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வள்ளலாா் நகா் ரங்கா காா்டனில் வசித்து வரும் மக்களிடம் காவல்துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடத்தினா்.
லால்குடி அருகே அப்பாத்துரை ஊராட்சியில் உள்ள வள்ளலாா் நகா் ரங்கா காா்டன் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, சமயபுரம் காவல் துறையினா் அப்பகுதி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், சந்தேகப்படும்படியான நபா்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால் அவா்களிடம் பேச்சு கொடுக்காமல் அருகில் உள்ளவா்களுக்கு போன் செய்து தகவல் தெரிவியுங்கள், இரவு நேரங்களில் பக்கத்து வீடுகளில் சப்தம் கேட்டாலோ, ஏதேனும் சந்தேகப்படும்படியாக தெரிந்தாலோ, காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்த போலீஸாா், திருட்டு நடைபெறாமல் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்கினா்.