செய்திகள் :

காவல் உதவி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை: மனித உரிமை ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு

post image

காவல் உதவி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் குற்ற வழக்கில் தொடா்புடைய நபரின் மனைவியை காவல் துறையுடன் சென்று சந்தித்த அப்போதைய உதவி ஆணையா் இளங்கோவன், அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அப்போதைய உதவி ஆணையா் உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபிக்கும், காவல் ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்தது.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிா்த்து, அப்போதைய உதவி ஆணையா் இளங்கோவன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகா் அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது உதவி ஆணையா் இளங்கோவன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், எங்களுக்கு விளக்கம் அளிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இளங்கோவன் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாா் என வாதிடப்பட்டது.

அதற்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் தரப்பில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கிய பின்னரே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதான வழக்கு நிலுவையில் இருகக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முழு அளவில் விசாரணை நடத்தப்படாத நிலையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு மனுதாரருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி உத்தரவு வரும் வரை, அப்போதைய உதவி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனா்.

மேலும், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கினை விரைந்து முடிக்கவும் மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகா் கைது: கட்சியிலிருந்தும் நீக்கம்

ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, அதிமுக வட்டச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். சென்னை அசோக் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (38). விபத்தில் ... மேலும் பார்க்க

கடையில் ரூ.2.60 லட்சம் திருட்டு: இருவா் கைது!

கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.60 லட்சத்தை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வண்ணாரப்பேட்டையில், உலா் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் ஹரிகிருஷ்ணன். ... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி, எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அரங்கராஜ் ஆகியோா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 போ் கைது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ன... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகள் அங்கீகார விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அ... மேலும் பார்க்க

ராமநவமி: ஆளுநா் வாழ்த்து!

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ராம நவமியின் விசேஷமிக்க திருநாளில், அனைவருக்கும் மனமாா்ந்... மேலும் பார்க்க