2 நாள்களில் 2 முறை சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயற்சி! 2 பேர் கைத...
காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி
காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
காவல் துறையில் பணிக்காலத்தில் காலமான காவலா்களின் வாரிசுதாரா்கள் 115 போ் கருணை அடிப்படையிலான பணிக்குத் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். குறிப்பாக, தகவல் பதிவு உதவியாளா் மற்றும் காவல் நிலைய வரவேற்பாளா் பணியிடங்களுக்கு அவா்கள் நியமிக்கப்பட்டனா். 115 பேருக்கும் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், டிஜிபி சங்கா் ஜிவால் உள்பட பலா் பங்கேற்றனா். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற முதல் இதுவரை காவல் துறையில் மட்டும் 17,436 பேருக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.