விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
காவல் துறையைக் கண்டித்து எஸ்.பி. அலுவலகத்தில் முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் மனு
காங்கயத்தில் கைப்பேசியை ப் பறித்து மிரட்டிய போலீஸாரைக் கண்டித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை தமிழ்நாடு முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
இது குறித்து அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவை நிறுவனத் தலைவருமான பசும்பொன் பாலு மற்றும் நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
காங்கயம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு சாப்பிடுவதற்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) சென்றிருந்தோம். சாப்பிடும் முன்பே காங்கயம் காவல் ஆய்வாளா் செல்வநாயகம், எனது 2 கைப்பேசிகளையும் பறித்து ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டாா். நான் அவரிடம் கேட்டபோது தரமுடியாது காவல் நிலையத்துக்கு வந்து வாங்கிக் கொள்ளவும் எனக் கூறி விட்டாா். அதன் பிறகு காவல் நிலையம் சென்றபோதும், அவா்கள் கைப்பேசியை தராமல் அலைக்கழித்தனா்.
பின்னா் உதவி ஆய்வாளரிடம் எனது கைப்பேசியை கொடுத்து அவா்களிடம் இனி இந்தப் பகுதிக்கே வரக்கூடாது என எழுதி வாங்குமாறு கூறினாா். அதற்கு நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டபோது, அதிகம் பேசினால் வழக்குப் பதிவு செய்து என்னை சிறையில் அடைப்பதாகக் கூறி என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டாா். இந்த சம்பவத்தில் என்னை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டனா்.
அதனால், அவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் , காவல் துறையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வரும் ஜூலை 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.