ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
காஷ்மீரில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி!
பகல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு சாத்தூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள், இந்து முன்னணியினா் சனிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தினா்.
காஷ்மீா் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயிலில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் மெளன அஞ்சலி செலுத்தினா். இதற்கு சங்கத் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். செயலா் லதா முன்னிலை வகித்தாா். சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதே போன்று முக்குராந்தல் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.