செய்திகள் :

காஷ்மீர்: "கவர்னரின் தோல்வியால் போரின் விளிம்புவரை..." - முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஆதங்கம்!

post image

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக்கு செல்லும் போது, காவல்துறையினரால் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த சம்பவத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கிட்டத்தட்ட காவலர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த முதலமைச்சர் பாஜக ஆட்சியாளர்களை 'மூடர்கள்' என்றும் 'குறுகிய பார்வை கொண்ட முடிவுகளை எடுக்கும், முட்டாள்கள்' என்றும் திட்டியிருக்கிறார்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் என்.டி.டி.வி தளத்துக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.

"பஹல்காம் தாக்குதல், என்னுடைய தோல்வி அல்ல"

பஹல்காம் தாக்குதல் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் நடைமுறையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு, "ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் பிரதிநிதியான லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவும் உளவுத்துறையின் தோல்வியுமே பகல்ஹாம் தாக்குதலுக்கு காரணம். இதை கவர்னரே ஒப்புக்கொண்டுள்ளார். என்னுடைய தோல்வி அல்ல. அவரது தோல்வியால் நாங்கள் போரின் விளிம்புவரை செல்லவேண்டியதாயிருந்தது." எனப் பதிலளித்துள்ளார் ஓமர் அப்துல்லா.

லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா
லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா

"காஷ்மீர் மக்கள் ஒரு பொருட்டல்ல என்கிறீர்கள்"

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக சாடிய ஓமர் அப்துல்லா, "இது எனக்கும் என் அமைச்சர்களுக்கும் நடந்ததைப் பற்றியதல்ல... இதன் மூலம் நீங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல்கள் கேட்கப்படாது என்ற செய்தியை மறைமுகமாக சொல்கிறீர்கள். காஷ்மீர் மக்கள் ஒரு பொருட்டல்ல என்கிறீர்கள்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் 'அதிகாரமற்றவர்கள்' என நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள். ஆனால் அவர்கள் சக்தியற்றவர்கள் அல்ல. இனி என்ன நடந்ததாலும் எங்களைக் குறை சொல்லாதீர்கள்" என்றார் ஆக்ரோஷமாக.

மேலும் 1931 போராட்டத்தில் இறந்தவர்களைத் தொடர்புபடுத்தும் விதமாக, "நாட்டில் வேறெந்த மக்களை விடவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடுமையாக போராடியவர்கள் அவர்கள். ஆனால் நீங்கள் அவர்களை 'வில்லன்கள்' போல சித்திரிக்கிறீர்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் வித்தியாசமாக பார்க்கிறீர்கள்" என மத்திய அரசைக் குற்றம்சாட்டினார் அப்துல்லா.

ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து!

ஆர்டிகள் 370-ஐ ரத்து செய்து பாஜக அறிவித்தபோது ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது.

அதன் பிறகு காஷ்மீர் மக்கள் நீண்ட போராட்டங்களின் விளைவாக மோடியும் அமித் ஷாவும் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுமென உறுதியளித்தனர். கடந்த தேர்தல் பிரசாரத்தில் கூட பிரதமர் அதனை 'இது மோடியின் வாக்குறுதி' என வலியுறுத்தினார்.

ஆனால் அந்தற்கான காலக்கெடுவை அறிவிக்கவில்லை. முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமர் அப்துல்லா, இதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். ஆனாலும் இரண்டு அரசுகளுக்கும் நடுவில் இணக்கம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்துக்குப் பிறகு , ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அறிவித்துள்ளார் ஓமர் அப்துல்லா.

``கூட்டணிக்கு அதிமுக தலைமை, நான் தான் முதலமைச்சர்; உங்களுக்கு என்ன சந்தேகம்?'' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஜூலை 16) சிதம்பரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

PMK: வன்னியர் சங்கம் டு அரசியல் கட்சி வரை! - 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாமகவின் கதை

1987 இல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் ஆட்சி செய்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. மருத்துவர் ஒருவரின் தலைமையில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பாதைகளை தடுத... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: முற்றிய பஞ்சாயத்து; நிர்வாகிகளின் பிடிவாதம் - மாநகர திமுக இரண்டாகப் பிரிந்த பின்னணி!

புதுக்கோட்டைப் பஞ்சாயத்து!கடந்த ஆண்டு நகராட்சியாக இருந்த புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த சமயத்தில் மாநகர செயலாளராக இருந்த செந்தில் என்பவர் உயிரிழந்தார். செந்தில் அமைச்சரும், திமு... மேலும் பார்க்க

'வைகோ Vs மல்லை சத்யா... தகிக்கும் தாயகம்' - பின்னால் இருக்கும் அரசியல் கணக்கு என்ன?

ம.தி.மு.க-வுக்கு போதாத காலமா எனத் தெரியவில்லை. சமீபகாலமாக அந்த கட்சியில் சலசலப்புகளும், சர்ச்சைகளும் தினமும் அரங்கேறிவருகிறது. கடந்த 9.7.2025 அன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ம.தி.மு.க நெல்லை மண்ட... மேலும் பார்க்க

Vijay : 'மதுரையில் பூமி பூஜை; இரண்டாவது மாநாட்டுக்கான தேதியை அறிவித்த விஜய்!' - முழு விவரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்.tvk vijayஇரண்டாவது மாநில மாநாடுவிஜய் வெளியிட்டிருக்கும் பதிவி... மேலும் பார்க்க

`Blood Money' கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஒரே வழி! - அது என்ன?

ஏமனில் தன்னுடைய தொழில் கூட்டாளியான தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட இருந்தது. ஆனால், இந்திய அரசின் தொடர் முயற்சியால் தற்போது... மேலும் பார்க்க