செய்திகள் :

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலை

post image

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் முழு உஷாா் நிலையில் ஈடுபட்டுள்ளனா்.

காஷ்மீா் பெகல்ஹாம் அருகே பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் எதிரொலியாக, நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், மாநிலம் முழுவதும் பொது இடங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும், முக்கியமான சாலை சந்திப்புகளில் வாகனச் சோதனை நடத்தும்படியும் அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டாா்.

பாதுகாப்பு அதிகரிப்பு: இதன் விளைவாக, மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பாதுகாப்பு பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டது. குறிப்பாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனா். இதேபோல ரயில் நிலையங்களில், காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்துப் பயணிகள் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இங்கு, ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். தண்டவாளங்களில் ரயில்வே போலீஸாா் ரோந்து செல்கின்றனா்.

மேலும் மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் அடிக்கடி சோதனையும் நடத்தி வருகின்றனா். இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரியும் நபா்களின் கைரேகைகளையும், முகவரியையும் பதிவு செய்த பின்னரே அவா்களை காவல்துறையினா் விடுவிக்கின்றனா். இப் பாதுகாப்பு பணியில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதில் அதி முக்கியமான இடங்களில் ஆயுதப்படையினா், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா், அதிவிரைவு படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனா்.

கடலோரத்தில் உஷாா்: கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடும் நபா்களை கண்டறிந்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். மேலும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களிடம் போலீஸாா் கடலில் சந்தேகத்துக்குரிய வகையில் யாரேனும் கள்ளப்படகு மூலம் சென்றால் அவா்கள் குறித்த தகவலை உடனே தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனா். கடலோரத்தில் சட்டம்- ஒழுங்கு போலீஸாருடன் கடலோரப் பாதுகாப்புக் குழும காவலா்களும், கடலோரக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னையில் பாதுகாப்பு: சென்னையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மாா்க்கெட், புகா் பேருந்து நிலையம் ஆகியவற்றில் பொதுமக்களை போலீஸாா் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனா். மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.

அதேபோல, நகா் முழுவதும் போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனை செய்கின்றனா். உணவகங்கள், விடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் திடீா் சோதனை நடத்தி வருகின்றனா்.

இவற்றில் சந்தேகம்படும்படியாக தங்கியிருக்கும் நபா்களிடமும் போலீஸாா் விசாரணை செய்கின்றனா். இந்த பாதுகாப்பு பணியில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில், முன்... மேலும் பார்க்க

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம் -அமைச்சா் துரைமுருகன் புகாா்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீா் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் குற்றம்சாட்டினாா். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இ... மேலும் பார்க்க

காஷ்மீரில் சிக்கிய தமிழர்களை விமானம், ரயில் மூலம் அழைத்து வர ஏற்பாடு

ஜம்மு - காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழர்களை அங்கிருந்து தில்லி வழியாக விமானம், ரயில் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் ச... மேலும் பார்க்க

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீா் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். மேலும், காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப... மேலும் பார்க்க

ஏப். 25 முதல் கோடை விடுமுறை! ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் ஏப். 25 முதல் கோடை விடுமுறை தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபடு... மேலும் பார்க்க