வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரஷிய ராணுவத்திற்கு ஆட்களை அனுப்பிய கும்பல் கைது!
காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் ‘காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்’ இன்று (ஜன. 19) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிபந்தனைகளைப் புதிதாக விதித்துள்ளார். அதில், இஸ்ரேலிலிருந்து சிறைப் பிடிக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிடக் கோரியுள்ளார். தாமதப்படுத்தினால் காஸாவில் குறிப்பிட்ட நேரத்தில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படாது என்றும் எச்சரித்துள்ளார்.