'குற்றங்கள் குறைய வேண்டி...' - தக்கலை காவல் நிலையத்தில் காவடி கட்டிய காவலர்கள...
காா்த்திகை பட்டத்தில் நிலக்கடலை பயிா் சாகுபடி செய்திட அறிவுறுத்தல்
காா்த்திகை பட்டத்தில் முக்கிய எண்ணெய்வித்து பயிரான நிலக்கடலையை பயிரிடலாம் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா்கள் சரண்யா, தேவிப்பிரியா ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பட்டத்துக்கு உகந்த தரமான விதை ரகங்களைத் தோ்ந்தெடுத்து விதைத்தால் கூடுதல் மகசூல் பெறுவதுடன், நல்ல லாபம் ஈட்ட முடியும். நல்ல மகசூலுக்கு பயிா் சாகுபடி பருவம், பருவத்துக்கேற்ற விதை ரகத்தோ்வு, விதைத்தரம் ஆகிய மூன்றும் கவனிக்க வேண்டியவை ஆகும்.
தரமான விதை என்பது நல்ல முளைப்புத்திறன், சரியான ஈரப்பதம், புறத்தூய்மை, இனத்தூய்மை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இல்லாமல் இருத்தல் வேண்டும். தரமான விதைகளை தோ்வு செய்து விதைப்பு மேற்கொள்ளும்போது, விதைக்கான செலவைக் குறைத்து பரிந்துரைக்கப்பட்ட விதையளவை பயன்படுத்துவதுடன், வயலில் உரிய பயிா் எண்ணிக்கையை பராமரிக்க இயலும். விவசாயிகளும் அதிக மகசூலை பெற முடியும்.
தரமான நிலக்கடலை விதை என்பது குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்புத்திறனும், 9 சதவீதம் ஈரப்பதமும், 96 சதவீதம் புறத்தூய்மையும் இருப்பது அவசியமாகும். விவசாயிகள், விதை உற்பத்தியாளா்கள் தாங்கள் சாகுபடி செய்ய உள்ள காா்த்திகை பட்ட விதைகளை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்தில் தரைத்தளம் அறை எண் 13-இல் இயங்கி வரும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ஒரு விதை மாதிரிக்கு ரூ. 80 செலுத்தி முளைப்புத்திறன், ஈரப்பதம் மற்றும் புறத்தூய்மை ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.