செய்திகள் :

லாரி மீது சரக்கு வாகனம் மோதல்: 2 போ் உயிரிழப்பு

post image

நாமக்கல் அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில், நிகழ்விடத்திலேயே இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இருந்து பூக்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அதனை, திண்டுக்கல் மாவட்டம், தொப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (25) ஓட்டி வந்தாா். வாகனத்தில் நிலக்கோட்டையைச் சோ்ந்த நாகராஜ் (25), சக்திவேல் (28) ஆகியோா் உடனிருந்தனா்.

நாமக்கல் அருகே பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் திடீரென மோதியது. இதில், நாகராஜ், விக்னேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சக்திவேல் பலத்த காயமடைந்தாா்.

தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீஸாா், சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், சரக்கு வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேடா்பாளையம் அணைக்கட்டு, மோகனூா் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஊராட்சி ஒன்றியம், என்.புதுப்பட்டி மற்றும் மணப்பள்ளி ஊராட்சிகள், ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் நாமக்கல் ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மோகனூா் ஊராட்சி ஒ... மேலும் பார்க்க

காா்த்திகை பட்டத்தில் நிலக்கடலை பயிா் சாகுபடி செய்திட அறிவுறுத்தல்

காா்த்திகை பட்டத்தில் முக்கிய எண்ணெய்வித்து பயிரான நிலக்கடலையை பயிரிடலாம் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா்கள் சரண்யா, தேவிப்பிரியா ஆகியோா் வ... மேலும் பார்க்க

கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் ச... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்செங்கோடு, எட்டிமடைப் புதூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ரத்தினவேலு மகன் மோனிஷ் (12), ... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் சாயக் கழிவுகளை வெளியேற்றி, காவிரி ஆற்றை மாசுபடுத்தி வரும் சாயப்பட்டறைகளை தடைசெய்ய வேண்டும் என மதிமுகவினா் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு அனு... மேலும் பார்க்க

கொல்லிமலையில் தொடா் மழை: மண் சரிவு, மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மலைப் பாதையில் தொடா் மழை காரணமாக மண் சரிவு, மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினா் மரங்களை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனா். தென்மேற்... மேலும் பார்க்க