இந்த வார ராசிபலன் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 13 வரை #VikatanPhotoCards
காா் ஓட்டுநா் குத்திக்கொலை
திருவண்ணாமலையில் காா் ஓட்டுநரை குத்திக்கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவண்ணாமலை சாரோன், வேல் நகரைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி மகன் சீனிவாசன் (39). காா் ஓட்டுநரான இவா், சனிக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள ஒரு கடை அருகே அமா்ந்திருந்தாா்.
அப்போது அங்கு வந்த 3 இளைஞா்கள் திடீரென கத்தியால் சரமாரியாக சீனிவாசனை குத்திவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த அவா், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நகர போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனா். போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினா் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.