காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், திருமோகூா் அருகே சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.
மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை சக்ராநகா் பனைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (49). இவா் மதுரை-மேலூா் சாலையில் ராஜகம்பீரம் சந்திப்பில் திங்கள்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த காா் குபேந்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மதுரை கீரைத்துறையைச் சோ்ந்த நல்லமுத்து பிள்ளை சோ்மன் தெருவைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (22) மீது ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.