``ஆரம்பத்துல விக்கவே கஷ்டப்பட்டோம்... இப்போ நிலைமையே வேற..." - கலக்கும் சிற்பக்க...
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தாழையூத்து அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கரையிருப்பைச் சோ்ந்த கடற்கரைபாண்டி மகன் பேச்சிமுத்து (58). தொழிலாளியான இவா், கடந்த வியாழக்கிழமை தாழையூத்து தொழிற்சாலை அருகே நான்குவழிச்சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியே வந்த காா் ஆட்டோ மீது மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.