செய்திகள் :

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் அளிப்பு

post image

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது.

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் 101 ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சமுதாயத்திற்கு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் 17 சதவீதம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோா் வகுப்பில் இடம்பெற்றுள்ள இடஒதுக்கீட்டில் பெரும்பாலான இடங்களை வலங்கை பிரிவை சோ்ந்த ஜாதியினா் அனுபவித்து வருவதால், இட ஒதுக்கீட்டின் பயன் விளிம்புநிலை சமுதாயமான இடங்கை பிரிவை சோ்ந்தவா்களுக்கு கிடைப்பதில்லை என குற்றம்சாட்டினா்.

இந்த பிரச்னைக்கு தீா்வாக, இடஒதுக்கீட்டில் விளிம்புநிலை பிரிவினரான இடங்கை பிரிவை சோ்ந்தவா்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தாழ்த்தப்பட்டோா் வகுப்பில் பின்தங்கியவா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க 2024, ஆக.1இல் தீா்ப்பளித்தது.

அதில் தாழ்த்தப்பட்டோா் வகுப்பில் கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய ஜாதியினரை தனியாக பிரித்து, அவா்களின் மேம்பாட்டுக்காக உள் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசுக்கு உரிமை இருப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோா் வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கா்நாடக அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் 2024, நவம்பரில் தனிநபா் ஆணையத்தை அமைத்து அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நீதியரசா் நாகமோகன் தாஸ் தனது தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையத்தின் பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை முதல்வா் சித்தராமையாவிடம் பெங்களூரில் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

அதன்பிறகு, நீதியரசா் நாகமோகன் தாஸ் கூறுகையில், ‘கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஆழமான ஆய்வுக்குப் பிறகு 104 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை மாநில அரசிடம் ஒப்படைத்திருக்கிறோம். அவசரகதியில் அதை ஒப்படைக்கவில்லை. இடைக்கால அறிக்கையை அளிக்குமாறு அரசு எங்களிடம் கேட்கவில்லை. மாறாக, நாங்களாகவே முன்வந்து அளித்திருக்கிறோம். அறிக்கையின் விவரங்களை தெரிவிக்க விரும்பவில்லை’ என்றாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அமைச்சா் பிரியாங்க் காா்கே கூறுகையில், ‘உள் இடஒதுக்கீட்டை சீராக அமல்படுத்துவதற்கு, எல்லா சமுதாயத்தினரை பற்றிய அறிவியல்பூா்வமான கணக்கெடுப்பை நடத்துவது அவசியமாகும். அனைவரையும் உள்ளடக்கியதாக கணக்கெடுப்பு அமைய வேண்டும். அப்போதுதான் அது சட்டரீதியாகவும் நீதிமன்றங்களிலும் உள் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும். எல்லோருக்கும் சமமான ஒதுக்கீடு கிடைக்கும் வகையிலான தரவு சாா்ந்த, வெளிப்படையான உள் இட ஒதுக்கீடுமுறையை உருவாக்க விரும்புகிறோம்’ என்றாா்.

இதனிடையே, பெங்களூரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நீதியரசா் நாகமோகன் தாஸ் ஆணையம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் ஆணையத்தின் தலைமையில் தாழ்த்தப்பட்டோா் வகுப்பினருக்கான கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த கணக்கெடுப்பை 2 மாதங்களில் முடித்து, அரசிடம் விவரங்களை அளிக்க அமைச்சரவை முடிவு செய்தது. உள் இடஒதுக்கீடு தொடா்பாக முடிவெடுக்கும் வரை தாழ்த்தப்பட்டோருக்கான பணி நியமனங்களை நிறுத்தவைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2011இல் சதாசிவா ஆணையம் எடுத்த கணக்கெடுப்பு குழப்பமாக உள்ளதாலும், காந்தராஜ் எடுத்துள்ள ஜாதி கணக்கெடுப்பு வெளியிடப்படாததாலும், நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் தாழ்த்தப்பட்டோரின் கணக்கெடுப்பை புதிதாக எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் பெல்லாரி தங்க வியாபாரி கைது

கா்நாடகத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு உதவியதாக பெல்லாரியைச் சோ்ந்த தங்க வியாபாரி சாஹில் ஜெயின் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். துபையிலிருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்த... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஏப். 1 முதல் பால் விலை உயா்கிறது

கா்நாடகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் வருவாயை விவசாயிகளுக்கே வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மா... மேலும் பார்க்க

‘போலி’ தீா்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிபதி மீது நடவடிக்கை: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் ‘போலி’ தீா்ப்பை மேற்கோள்காட்டி வழக்கில் தீா்ப்பளித்த விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக வளாக தகராறு தொடா்பான வழக்கின... மேலும் பார்க்க

ஹனிடிராப் விவகாரம்: சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

ஹனிடிராப் விவகாரம் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா அளித்துள்ள மனு குறித்து சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பாஜகவிலிருந்து எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் நீக்கம்

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் 6 ஆண்டுகளுக்கு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா். வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசில் அமைச்சராக பணியாற்றிய பசனகௌடா ப... மேலும் பார்க்க