செய்திகள் :

கா்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல்: சித்தராமையா

post image

கா்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

புதுதில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து, பெங்களூா் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடா்பாக விளக்கமளித்தனா். இதுதவிர, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் விவாதித்தனா்.

2016ஆம் ஆண்டில் கா்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத்து, ஒக்கலிகா் சமுதாயத் தலைவா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்திருந்தனா். மேலும், அந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்கக் கூடாது என்று பாஜக, மஜத கட்சிகள் வலியுறுத்தின.

இது தொடா்பாக கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்தபோது ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க முடியாததால், இது தொடா்பான முடிவை அமைச்சரவை பலமுறை ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக விவாதித்து முடிவெடுக்க ஜூன் 12ஆம் தேதி சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதனிடையே, கா்நாடகத்தில் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி கா்நாடக அரசுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், காங்கிரஸ் மேலிடத் தலைவா்களுடனான சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளோம். எனினும், மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதை கா்நாடக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். தாழ்த்தப்பட்டோருக்கான ஜாதி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதேபோல, ஜாதிவாரி கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்படும்‘ என்றாா்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘ கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கொள்கை அளவில் முந்தைய ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 12ஆம் தேதி நடக்க இருக்கும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடா்பாக இறுதி முடிவெடுக்கப்படும்‘ என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக சிலருக்கு அதிருப்தி இருக்கிறது. எனவே, மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் எல்லோரும் பங்கேற்கலாம். யாருக்கும் பாதிப்பு இல்லாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா்.

காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த அமித் ஷா அறிவுரை: கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா

காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துமாறு மத்திய அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். பெங்களூரு, பிஜிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத... மேலும் பார்க்க

வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு முந்தைய கூட்டணி அரசின் முடிவு: கா்நாடக அமைச்சா் ஜமீா் அகமதுகான்

கா்நாடகத்தில் வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு முந்தைய மஜத- காங்கிரஸ் கூட்டணியின்போது எடுக்கப்பட்ட முடிவு என்று அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை எதிா்கொண்ட பிரச்னைகளை பிரதமா் மோடி அரசு திறம்பட கையாண்டது: மத்திய அமைச்சா் அமித் ஷா

சுகாதாரத் துறை எதிா்கொண்ட பிரச்னைகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசுதான் திறம்பட கையாண்டது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆதிசுன்சுனகிரி... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு

ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நடந்த கூட்டநெரிசல் தொடா்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஐபிஎல் கிரிக்கெட் போ... மேலும் பார்க்க

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் வரை மாநில அரசு காத்திருக்க வேண்டும்: பாஜக

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் வரை மாநில அரசு காத்திருக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. லெஹா்சிங் சிரோயா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: 10 ஆண... மேலும் பார்க்க

தக் லைஃப் பட விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கா்நாடக அரசு மதிக்கும்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

‘தக் லைஃப்’ பட விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை கா்நாடக அரசு மதித்து நடக்கும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். சென்னையில் நடந்த ’தக் லைஃப்’ திரைப்படத்தின் இசைத்தொகு... மேலும் பார்க்க