செய்திகள் :

கா்நாடக அரசுப் பேருந்தில் பெண்ணின் நகை மாயம்

post image

கா்நாடகத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த கா்நாடக அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் 8 பவுன் நகை காணாமல் போனதான புகாரின் பேரில் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் சத்தியமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கா்நாடக மாநிலத்திலிருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி கா்நாடக அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.

ஆசனூா் வந்தபோது தேநீா் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் கடைக்கு சென்று வந்தனா். பின்னா் பேருந்து அங்கிருந்து புறப்பட்டபோது சித்ரா என்ற பெண், தான் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை காணவில்லை என பேருந்து ஓட்டுநரிடம் கூறினாா். இதையடுத்து, ஓட்டுநா் பேருந்தை எங்கும் நிறுத்தாமல் சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு ஓட்டி வந்தாா்.

பெண் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் பேருந்தில் வந்த ஒவ்வொரு பயணியின் பையையும் சோதனையிட்டனா். ஆனாலும் காணாமல் போன நகை கிடைக்கவில்லை.

இதற்கிடையே பயணிகளை சோதனையிட்டபோது சுமாா் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகளை 2 பெண்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பேருந்தில் நகை காணாமல் போனது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இருசக்கர வாகனம் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

புன்செய்புளியம்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட ஆட்சியா் இடமாற்றம்

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தமிழகம் முழுவதும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 55 போ் பணியிடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்கறிஞா் மறைவு: மத்திய சட்டத் துறை அமைச்சா் அஞ்சலி

சென்னை உயா்நீதி மன்ற மூத்த வழக்குரைஞராக பணியாற்றிவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்ஷின் தந்தையூமான வி.கே. முத்துசாமி வயது மூப்பு காரணமாக எழுமாத்தூா் விகேஎம் தோட்ட இல்லத்தில் கடந்த வாரம் க... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு வனத் துறையினா் ரூ.1000 அபராதம் விதித்தனா். சென்னிமலை வனப் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் அவ்வப்போது சாலைக்கு வருவது வழக்கம். அந்த குரங்குக... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் பலி

பெருந்துறை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்துச் சென்றவா் உயிரிழந்தாா். கோவை,பாப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன்(45). இவா் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடிஅருகில் ஞாயிற்றுக்கிழமை மால... மேலும் பார்க்க

வீடுகளுக்கு கழிப்பறை கட்டித்தர எம்எல்ஏவிடம் கோரிக்கை

பெருந்துறை ஒன்றியம், பள்ளப்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட எல்லிஸ்பேட்டை, அண்ணா காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்குக் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாரிடம்... மேலும் பார்க்க