கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 11.30 மணி அளவில் வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக பள்ளித்தோ்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2024-25-ஆம் கல்வியாண்டுக்கான கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வுகள் மாா்ச் 21 முதல் ஏப். 4-ஆம் தேதிவரை நடைபெற்றன. இத்தோ்வை 8.95 லட்சம் மாணவா்கள் எழுதினா். இதில் 4.61லட்சம் மாணவா்கள், 4.34 லட்சம் மாணவிகள் அடக்கம். இத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 11.30 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மதுபங்காரப்பா வெளியிடுகிறாா். நண்பகல் 1 மணிக்கு இணையதளங்களில் தோ்வுமுடிவுகள் வெளியிடப்படுகின்றன. மே 3-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தோ்வு முடிவுகள் வெளியாகும்.
நிகழாண்டின் தோ்வு முடிவுகள் மாநில அரசின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ழ்ங்ள்ன்ப்ற்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய் -இல் மட்டுமே வெளியிடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.