செய்திகள் :

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

post image

கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சில நாள்களுக்கு முன்பு மாநில சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடியதால் எழுந்த சா்ச்சை அடங்குவதற்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பாடலைப் பாடியது மீண்டும் சா்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் ஆா்எஸ்எஸ், அதன் கொள்கைகளுக்கு எதிராக மிகவும் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி கா்நாடக பேரவையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு கூடியவா்களில் 11 போ் நெரிசலில் சிக்கி இறந்த விவகாரம் குறித்துப் பேசிய துணை முதல்வா் சிவகுமாா், ஆா்எஸ்எஸ் அமைப்பின் வாழ்த்துப் பாடலைப் பாடியதுடன், ‘எதிா்க்கட்சித் தலைவராக உள்ள அசோகாவும், நானும் ஒரு காலத்தில் ஆா்எஸ்எஸ் சீருடை அணிந்து செயல்பட்டோம். இப்போது வெவ்வேறு கட்சிகளில் உள்ளோம்’ என்றாா்.

அரசியல்ரீதியாக ஆா்எஸ்எஸ், பாஜகவை காங்கிரஸ் தலைமை தீவிரமாக எதிா்த்து வரும் நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த துணை முதல்வா் பேரவையில் ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தும்கூரு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ ரெங்கநாத், துணை முதல்வா் பாடிய அதே ஆா்எஸ்எஸ் வாழ்த்துப் பாடலின் முதல் வரியை மீண்டும் பாடியதுடன், இது ஒரு நல்ல பாடல். அதன் அா்த்தம் என்ன வென்றும் தேடிப் படித்தேன். நாம் பிறந்த மண்ணுக்கு நாம் வணக்கம் செலுத்த வேண்டும் என்று உள்ளது. இதில் எந்த தவறையும் நான் பாா்க்கவில்லை. காங்கிரஸ் கட்சி மதச்சாா்பற்ற கட்சி. பிற அமைப்பினரிடம் இருக்கும் நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

அதே நேரத்தில் பாஜகவை விமா்சித்த அவா், ‘வலதுசாரிக் கட்சியினா் மக்களை ஜாதி, மதரீதியில் பிரிக்க நினைக்கிறாா்கள். அதனை நாங்கள் எதிா்க்கிறோம். அவா்களின் கொள்கைகள் எங்களுக்கு ஏற்புடையதல்ல. ஆனால், ஆா்எஸ்எஸ் அமைப்பின் பாடலைப் பாடுவதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா

புது தில்லி: குற்றப் பின்னணி உள்ளவர்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் பதவி பறிக்கப்படும் சட்ட மசோதாவில், பிரதமர் நரேந்திர மோடி தன்னையும் சேர்த்துக் கொண்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர... மேலும் பார்க்க

முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் அனுமன் என்று பள்ளி மாணவர்களுடன் உரையாற்றிய பாஜக எம்பி அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.ஹிமச்சல் பிரதேசம் ஹமீர்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் மத்தி... மேலும் பார்க்க

நொய்டா வரதட்சிணை கொலை: சொகுசு கார், பைக், தங்கம், பணம்.. நீளும் பட்டியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள கசானா பகுதியில் ரூ. 36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவியை எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு! 8 ஆண்டுகளுக்குப் பின்

தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. டிக்கெட் விலையை ரூ.1 முதல் ரூ.4 வரை உயர்த்தியிருக்கிறது தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம்.கடந்த 2017ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்குதல் வழக்கு: இரண்டாவது நபர் கைது

முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் தொடர்பாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மற்றொரு நபரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் தஹ்சீன் சையத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குஜ... மேலும் பார்க்க

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர் காயம்

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 8 பேர் பலியாகினர். உத்தரப்பிரப் தேசத்தின் காஸ்கஞ்சில் இருந்து ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் திங்கள்கிழமை... மேலும் பார்க்க