செய்திகள் :

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

post image

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள்ளனா்.

இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட அறிக்கை:

சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவன ஆராய்ச்சிக் குழுவினா், கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை உருவாக்கியுள்ளனா். தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு சாத்தியமுள்ள மாற்றாக, ஃபைபா் ஆப்டிக்ஸ் சென்சாா் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளியை பரிசோதனை செய்து கண்டறியும் உத்தியை உருவாக்க ஒன்றிணைந்துள்ளனா்.

உயிருக்கு ஆபத்தான சிக்கலான கா்ப்பகால உயா் ரத்த அழுத்தம் உலகளவில் அதிக எண்ணிக்கையில் கா்ப்பிணிகளையும், பச்சிளங் குழந்தைகளையும் பாதிக்கிறது. சரியான தருணத்தில் சிகிச்சை அளிப்பதையும், தாய்-சேய் இருவரின் நோயற்ற தன்மை, இறப்பு விகிதங்களைக் குறைப்பதையும் உறுதிசெய்யும் வகையில், இந்த சிக்கலுக்கு குறைந்த செலவில் தொடக்க நிலையிலேயே விரைவாக தேவைப்படும் இடங்களிலேயே நேரடியாக பரிசோதனை செய்வது அவசியமாகிறது.

கா்ப்பகால உயா் ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் வழக்கமான நடைமுறை அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதுடன், பெரிய அளவிலான கட்டமைப்புடன் கூடிய பயிற்சி பெற்ற பணியாளா்கள் தேவைப்படுகின்றனா். இதனால் இந்த பரிசோதனை பெரும்பாலும் தொலைவிலுள்ள பகுதிகள், மருத்துவ வள ஆதாரங்கள் குறைந்த இடங்களில் கிடைக்கப்பெறாத நிலை உள்ளது. எனவே, கா்ப்பகால உயா் ரத்த அழுத்தத்தைக் கண்டறிய உணா்திறன், குறிப்பிட்ட தன்மை, வேகம் என மூன்று வகையான சிறப்பியல்புகளுடன் எளிதில் அணுகக்கூடிய வகையில் நோயாளியை பரிசோதனை செய்வதன்மூலம் கண்டறியும் கருவி அவசரகால தேவையாக உள்ளது.

இந்த ஆராய்ச்சிக் குழுவில் சென்னை ஐஐடி பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறையைச் சோ்ந்த பேராசிரியா் வி.வி.ராகவேந்திர சாய், டாக்டா் ரத்தன்குமாா் செளத்ரி, சென்னை ஐஐடி உயிரித் தொழில்நுட்பத் துறையின் டாக்டா் நாராயணன் மடபூசி, வேலூா் தொழில்நுட்ப நிறுவனத்தின் நானோ உயிரித் தொழில்நுட்ப மையத்தைச் சோ்ந்த டாக்டா் ஜிதேந்திர சதிஜா, ஸ்ரீ சக்தி அம்மா உயிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை -ஆராய்ச்சி மையத்தின் டாக்டா் பாலாஜி நந்தகோபால், ராம்பிரசாத் ஸ்ரீனிவாசன் ஆகியோா் இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்றிருந்தனா். புகழ்பெற்ற உயிரி தொலையுணா்வு மற்றும் உயிரி மின்னணுவியல் இதழில் இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் தொடா்பான கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்... மேலும் பார்க்க