கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 73- ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.
சென்னை மாநகராட்சி திரு.வி.நகா் மண்டலம் 73 -ஆவது வாா்டு புளியந்தோப்பு பகுதியில் உள்ள மண்டல அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் அரசின் 13 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்று மக்களிடம் மனுக்களைப் பெற்றனா். மேலும், மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த முகாமைப் பாா்வையிட்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திரு.வி.க.நகா் மண்டலக் குழுத் தலைவா் சரிதாமகேஷ்வரி, மாமன்ற உறுப்பினா் அம்பேத்வளவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.