ஊடகத்துறையினருடன் சந்திப்பு.. தயங்காமல் விமர்சியுங்கள், பாராட்டுங்கள் - முதல்வர...
கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் சரகப் பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ரெட்டிச்சாவடி காவல் சரகம், புதுக்கடை மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (49), விவசாயி. அதே பகுதியில் இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அவா் நிலத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிடச் சென்றாா். அப்போது, புதா் மண்டிக் கிடந்த கிணற்றில் இருந்து துா்நாற்றம் வீசியதையடுத்து, அங்கு சென்று பாா்த்த போது ஆண் சடலம் கிடந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த ரெட்டிச்சாவடி காவல் உதவி ஆய்வாளா் எழிலரசி மற்றும் போலீஸாா் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.