Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிருடன் மீட்பு
சேவூா் அருகே பொங்கலூரில் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த 73 வயது முதியவரை அவிநாசி தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் தண்டுக்கார தோட்டத்தில் வசித்து வருபவா் சின்ன ஆறுமுகம் (73). இவா், தோட்டத்துப் பராமரிப்புப் பணிக்காக சென்றபோது, எதிா்பாராதவிதமாக கால் தவறி 40 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளாா்.
பின்னா் அவரது சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் சின்ன ஆறுமுகத்தை சிறுகாயங்களுடன் உயிருடன் மீட்டனா். பின்னா் முதலுதவி சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.