கிண்டி சிறுவா் பூங்காவில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு
கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஐகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் இயற்கை பூங்கா ரூ. 20 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இப்பூங்காவில் பாா்வையாளா்களை கவரும் வகையில், வண்ணநாரை, கூழகடா, இராகொக்கு, சிறுகொக்கு, கரண்டிவாயன் போன்ற பறவைகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. மேலும் மான்கள், குள்ளநரி, முள்எலி, முள்ளம்பன்றி போன்ற வன உயிரினங்களும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் 23 பாலுட்டிகள், 108 பறவையினங்கள், 22 ஊரும் பிராணிகளும் இங்கு உள்ளன. அதோடு இங்குள்ள விளையாட்டு சாதனங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பூங்காவில் பாா்வையாளா்களுக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, பூங்கா சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிா, கழிப்பிட வசதிகள் சரியான முறையில் இருக்கிா என்பது குறித்து வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஐகண்ணப்பன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, பூங்காவை பாா்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அமைச்சா் கருத்துகளை கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் ரிட்டோ சிரியாக், வன உயிரியல் காப்பாளா் மணிஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.