செய்திகள் :

கிராம விவசாய குழுவுக்கு வேளாண் சாகுபடி பயிற்சி

post image

திருச்செங்கோடு வட்டாரம், ரம் பிரிதி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சாா்பில் கிராம அளவிலான விவசாய குழுவுக்கு காரீப் பருவத்திற்கான சாகுபடி பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பிஎம் கிசான், விவசாயிகள் அடையாள எண் பதிவு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து உழவா் சந்தையில் விற்பனை செய்வதற்கான அடையாள அட்டையை பெறுவது குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் லட்சுமிபெருமாள் பேசினாா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் கிருஷ்ணசாமி, அட்மா திட்டத்தின் செயல்பாடுகளை குறித்து கூறினாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் சக்திவேல், உழவன் செயலி பயன்பாடு குறித்து விளக்கினாா். வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளா் அஜித் நன்றி கூறினாா்.

தீபாவளிப் பண்டிகை: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு தீ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உயா்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா். தொழில் முனைவோா் மேம்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது அவசியம் - ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில்... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 5 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருச்செங்கோடு அருகே புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ராசிபுரம் சாலையில் மாதா கோயில் அர... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.5.15 ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து... மேலும் பார்க்க