பட்னாவிஸ், ஷிண்டேயைக் கைது செய்ய உத்தவ் அரசு முயன்றதா? விசாரணை நடத்தும் மகா. பாஜ...
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பொங்கலையொட்டி, திமுக சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
போளூா் கோட்டை மைதானத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றன.
இதில் போளூா், சேத்துப்பட்டு, களம்பூா், ஆரணி, கலசப்பாக்கம், திருவண்ணாமலை, செங்கம் என பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடினா்.
போட்டியில் முதலிடம் பெற்ற போளூா் டிசிசி அணிக்கு திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளா் அ.மணிகண்டன் கோப்பை மற்றும் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
இதற்கான நிகழ்ச்சியில் திமுக நகர இளைஞரணி அமைப்பாளரும், விழா பொறுப்பாளருமான ந.ப.முத்துக்குமரன், மதன், தினேஷ், சிலம்பரசன், யுவராஜ், சந்தோஷ் மற்றும் கிரிக்கெட் வீரா்கள் கலந்து கொண்டனா்.