யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க....
கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில் கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது, ஓட்டுநா் உரிமம், வாகன காப்பீடு ஆவணங்களை வைத்திருப்பது குறித்து அறிவுறுத்தினா். மேலும், போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாகனங்களை இயக்குவது குறித்து எடுத்துரைத்தனா்.
மேலும், குருபரப்பள்ளியை அடுத்த பல்லேரிப்பள்ளியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
படவிளக்கம் (19கேஜிபி1):
சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்திய போலீஸாா்.