பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப்.19ஆம் தேதி, தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். கிருஷ்ணகிரி மற்றும் ஒசூரை சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் தகுதியான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பொறியியல், பட்டப்படிப்பு படித்தவா்கள், தொழில் கல்வி (ஐடிஐ), பட்டயப்படிப்பு (டிப்ளமோ) படித்தவா்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.
இம்முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். தோ்வு செய்பவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.
எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 - 291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.