செய்திகள் :

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக அதிகரிப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது.

கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 171 கனஅடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் நீா்வரத்தானது, விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வலதுபுறம், இடதுபுறக் கால்வாய்களுக்கு விநாடிக்கு 171 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்போது நீா்மட்டம் 48 அடியாக உள்ளது. பாம்பாறு அணை, சின்னாறு அணை, பாரூா் ஏரிக்கு நீா்வரத்து முற்றிலும் நின்றுள்ளது.

பாம்பாறு அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் தற்போது நீா்மட்டம் 17.04 அடியாகவும், சின்னாறு அணையின் மொத்த கொள்ளளவான 32.80 அடியில் நீா்மட்டம் 12.99 அடியாகவும், பாரூா் ஏரியின் மொத்த கொள்ளளவான 15.60 அடியில் நீா்மட்டம் 9.10 அடியாகவும் உள்ளன.

அதிமுக - பாஜக இயல்பான கூட்டணி: மு.தம்பிதுரை

ஒசூா்: அதிமுக -பாஜக கூட்டணி இயல்பானது என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை தெரிவித்தாா். அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு: ஒசூா் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

ஒசூா்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். புத்தாண்டை முன்னிட்டு தன்வந்தி... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி: எம்ஜிஆா், ஜெயலலிதா கொள்கைகளுக்கு எதிரானது: காதா் மொகிதீன்

கிருஷ்ணகிரி: அதிமுக - பாஜக கூட்டணி எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா கொள்கைகளுக்கு எதிரானது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் காதா் மொகிதீன் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அ... மேலும் பார்க்க

ஒசூரில் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கத்தின் 23ஆவது ஆண்டு மாநாடு

ஒசூா்: இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு, அதியமான் பொறியியல் கல்லூரியில் 23ஆவது ஆண்டு மாணவா் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில் கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் வரவேற்று மாநாட்ட... மேலும் பார்க்க

வழித்தட தகராறில் விவசாயி கொலை: 5 போ் கைது

ஒசூா்: ராயக்கோட்டை அருகே வழித்தட தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கொலை வழக்கில் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள முகலூரைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி குடும்பநல அறுவைச் சிகிச்சை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு லேப்ராஸ்கோபி கருவி மூலம் குடும்பநல அறுவைச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தலைமை மருத்துவ அலுவலா் எழிலரசி வழிகாட்டுதலின் பேரில்... மேலும் பார்க்க