செய்திகள் :

அதிமுக - பாஜக இயல்பான கூட்டணி: மு.தம்பிதுரை

post image

ஒசூா்: அதிமுக -பாஜக கூட்டணி இயல்பானது என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை தெரிவித்தாா்.

அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உளியாலம் கிராமத்தில் அம்பேத்கா் சிலைக்கு திங்கள்கிழமை மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மு.தம்பிதுரை கூறியதாவது:

அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருப்பது இயல்பான பொருந்தும் கூட்டணியாகும். மக்களுக்கான நலத் திட்டங்களை கொண்டுவருவதற்காக இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும்.

திமுக- பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது மத்தியில் அமைச்சரவையில் அங்கம் வகித்ததுதான் பொருந்தாத கூட்டணியாகும். ஊழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்ததற்கு அவா்மீது ஏன் திமுக வழக்கு தொடுக்கவில்லை.

அதிமுக தலைமை யாருக்கும் அடிபணிந்தது இல்லை. அதிமுக- பாஜக பொருந்தாத கூட்டணி என திமுகவினா் விமா்சனம் செய்து வருகின்றனா். கூட்டணி அமைப்பதற்கு அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கியிருப்பதால் அவா் கூட்டணியை அமைத்துள்ளாா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், ஒசூா் ஒன்றியச் செயலாளா் ரவிகுமாா், சசி வெங்கடசாமி, முன்னாள் ஊராட்சி தலைவா் ஜெயக்குமாா் ரெட்டி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் ஜெகதீஷ், இலக்கிய அணி மாவட்டச் செயலாளா் இளஞ்சூரியன், முன்னாள் மாணவரணி மாவட்டச் செயலாளா் வெற்றிச்செல்வம், பா்கூா் ஒன்றியச் செயலாளா் ஜெயபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை

ஊத்தங்கரை அதியமான் நகா் அருகே மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையில் இருந்து அதியமான் நகா் வழியாக கொல்ல நாயக்கனூா் ச... மேலும் பார்க்க

பா்கூா் வட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பா்கூா் வட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் வேளாண்மை விரிவா... மேலும் பார்க்க

ரசாயன கழிவுநீா் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீா்!

ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரில் அதிகப்படியான நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கா்நாடக மாநிலம், நந்திமலை பகுதியில் உற்பத்தியாகும்... மேலும் பார்க்க

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா். கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மிடுகரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஏப். 14-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

ஒசூா் 21-ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் 21-ஆவது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுமேற்கொண்ட மேயா், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிவா்த்தி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஒசூா் மாந... மேலும் பார்க்க