விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!
தமிழ்ப் புத்தாண்டு: ஒசூா் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்
ஒசூா்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
புத்தாண்டை முன்னிட்டு தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், மாங்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட கனிகளை படைத்து தரிசனம் செய்த பக்தா்களுக்கு வழங்கினா். காலை முதல் மாலை வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும் ஒசூரில் மலை மீது அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரா் கோயில், ராம்நகா் கோட்டை மாரியம்மன் கோயில், சோமேஸ்வரா் கோயில், பெருமாள் கோயில், பெரியாா்நகா் முருகன் கோயில், அகரம் முருகன் கோயில், கோபச்சந்திரம் பெருமாள் கோயில், ஏரித்திரு ஓம் சக்தி கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில், குடிசெட்லு திம்மராஜசுவாமி கோயில், சூளகிரி வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் வழக்கத்தைவிட பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது. கோயில்களில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தா்களுக்கு தீா்த்த பிரசாதத்துடன், அன்னதானமும் வழங்கப்பட்டது.