டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77 ஆக முடிவு!
மும்பை: பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77ஆக முடிந்தது.
உலகளாவிய கச்சா விலை சரிவு, சாதகமான உள்நாட்டு பணவீக்கம் மற்றும் ஜூலை 9ஆம் தேதி வரையான இந்தியா மீதான கூடுதல் கட்டணங்களை நிறுத்தி வைக்க அமெரிக்க நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கை ஆகியவை இந்திய ரூபாயின் மதிப்பை ஆதகரித்தாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.85 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.59 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.85 ஐ தொட்ட நிலையில், முடிவில் 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77 ஆக முடிந்தது.
இந்திய ரூபாய் வெள்ளிக்கிழமை அன்று 58 காசுகள் அதிகரித்து ரூ.86.10 ஆக இருந்தது.
இதையும் படிக்க:மின்னணு சாதனங்கள் மீதான கட்டணத்தை டிரம்ப் தளர்த்தியதையடுத்து சென்செக்ஸ், நிஃப்டி 2% உயர்வு!