`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தா...
மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை: 2 நாள்களில் ரூ. 2,680 அதிகரிப்பு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்துள்ளது.
கடந்த வார இறுதிமுதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துவந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்தது.
தொடர்ந்து, மாலை மீண்டும் சவரனுக்கு ரூ. 960 அதிகரித்து, ஒரு சவரனின் விலை ரூ. 67,280 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,480 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 தடாலடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 8,560-க்கும், ஒரு சவரன் ரூ. 68,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 2,680 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 3 அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.