செய்திகள் :

மின்னணு சாதனங்கள் மீதான கட்டணத்தை டிரம்ப் தளர்த்தியதையடுத்து சென்செக்ஸ், நிஃப்டி 2% உயர்வு!

post image

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மின்னணு பொருட்கள் மீதான கட்டணங்களை தளர்த்தியுள்ள நிலையில், வாகனங்களுக்கான வரி திருத்தத்தை பரிந்துரைத்ததையடுத்து, பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,750.37 புள்ளிகள் உயர்ந்து 76,907.63 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,577.63 புள்ளிகள் உயர்ந்து 76,734.89 புள்ளிகளாகவும், நிஃப்டி 500 புள்ளிகள் உயர்ந்து 23,328.55 புள்ளிகளாக நிலைபெற்றது.

ஏப்ரல் 2ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட டிரம்பின் பரஸ்பர கட்டணங்களால் சரிந்த பங்குச் சந்தையின் அனைத்து இழப்புகளையும் முக்கிய துறை குறியீடுகள் மூலம் மீட்டெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்இ துறை குறியீடுகளும் இன்று உயர்ந்து முடிந்த நிலையில், ரியாலிட்டி, ஆட்டோ, கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரியல் பங்குகள் தலா 5 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

சென்செக்ஸில் இண்டஸ்இண்ட் வங்கி 6.84 சதவிகிதமும், டாடா மோட்டார்ஸ் 4.50 சதவிகிதம் உயர்ந்தது. லார்சன் & டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்சிஎல் டெக் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது. ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.

முன்னர் விதிக்கப்பட்ட கட்டணங்களிலிருந்து வாகனத் துறைக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் பரிந்துள்ளதையடுத்து ஆசிய சந்தைகள், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, டோக்கியோவின் நிக்கேய் - 225, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தாலும் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று வெகுவாக உயர்ந்த நிலையில், மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் உயர்ந்து முடிந்தது.

சீனா மீதான வரி அறிவிப்பிலிருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களை அமெரிக்கா நீக்கிய பிறகு, பங்குச் சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து வர்த்தகமானது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள வாகனங்களுக்கான 25% வரிகளுக்கு விலக்கு அளிக்கலாம் என்ற டிரம்ப் பரிந்துரைத்ததையடுத்து, வாகன துறை பங்குகள் வெகுவாக உயர்ந்தது. சமீபத்திய கட்டண அறிவிப்புகள் அமெரிக்க நுகர்வோர் மற்றும் அதன் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை வெள்ளை மாளிகை நன்கு உணர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், பிப்ரவரி மாதத்தில் 2.38 சதவிகிதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 2.05 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.2,519.03 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.52 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 64.54 டாலராக உள்ளது.

இதையும் படிக்க: ஐஓபி-யின் வட்டி விகிதம் குறைப்பு

விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4% சரிவு

கடந்த மாா்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து துறை ஆலோசனை நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்!

மோட்டரோலா நிறுவனம் தனது புதிய எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸின் விலையானது ரூ.22,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி + 256 ஜிபி ரேம் ம... மேலும் பார்க்க

ஏசஸ் அறிமுகப்படுத்தும் 3 புதிய மடிக்கணினிகள்!

இந்திய சந்தையில் ஏசஸ் நிறுவனம் புதிதாக 3 மடிக்கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த 3 மடிக்கணினிகளும் 13ஆம் தலைமுறையைச் (13வது ஜெனரேஷன்) சேர்ந்தவை.எக்ஸ்பர்ட் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77 ஆக முடிவு!

மும்பை: பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77ஆக முடிந்தது.உலகளாவிய கச்சா விலை சரிவு, சாதகமான உள்நாட்ட... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்: ஒரே மாதத்தில் 11.3 லட்சம் பேர் இணைந்தனர்!

மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த பிப்ரவரியில் பங்குச்சந்தையில் புதிதாக 11.3 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தைக் குறியீடு(என். எஸ். இ)... மேலும் பார்க்க

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை: 2 நாள்களில் ரூ. 2,680 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்துள்ளது.கடந்த வார இறுதிமுதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துவந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்தது.தொடர்ந்த... மேலும் பார்க்க