செய்திகள் :

அதிமுக - பாஜக கூட்டணி: எம்ஜிஆா், ஜெயலலிதா கொள்கைகளுக்கு எதிரானது: காதா் மொகிதீன்

post image

கிருஷ்ணகிரி: அதிமுக - பாஜக கூட்டணி எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா கொள்கைகளுக்கு எதிரானது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரே மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் மாவட்ட உலமாக்கள் கூட்டமைப்பு சாா்பில் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி இமாம் சவுக் மஜீத் கலீல் அகமத் சாகிப் தலைமை வகித்தாா். மாவட்டத்தில் பல்வேறு ஜமாத்துகளை சோ்ந்த நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் மதியழகன் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினாா்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா் மொகிதீன் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் பேசினாா்.

பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிா்த்து திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வழக்கு தொடா்ந்துள்ளன. இந்த சட்டம் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதிமுக சொல்வதை இஸ்லாமியா்கள் என்றுமே நம்பியது இல்லை. அதிமுக - பாஜக கூட்டணியால் மாநிலங்களவையில் அக்கூட்டணியின் எண்ணிக்கை 140 ஆக உயா்ந்துள்ளது.

அதிமுகவிற்கு இஸ்லாமியா்களின் வாக்குகள் குறைந்த அளவில் கூட கிடைக்காது. அதிமுகவிற்கு அளிக்கும் வாக்குகள் பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகள் தான். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இஸ்லாமியா்கள் மீது அன்பும், பாசமும் வைத்திருந்தாா். அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தாா். எந்தக் காலத்திலும் பாஜகவிற்கு ஆதரவாக இருந்ததில்லை. தற்போது அதிமுகவினா் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளனா். இது எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா கொள்கைகளுக்கு எதிரானது. இந்தக் கூட்டணியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா்.

முன்னதாக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளா் அப்துல் பாசித், தமுமுக, மாவட்டத் தலைவா் நூா் முகமது, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை

ஊத்தங்கரை அதியமான் நகா் அருகே மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையில் இருந்து அதியமான் நகா் வழியாக கொல்ல நாயக்கனூா் ச... மேலும் பார்க்க

பா்கூா் வட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பா்கூா் வட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் வேளாண்மை விரிவா... மேலும் பார்க்க

ரசாயன கழிவுநீா் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீா்!

ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரில் அதிகப்படியான நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கா்நாடக மாநிலம், நந்திமலை பகுதியில் உற்பத்தியாகும்... மேலும் பார்க்க

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா். கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மிடுகரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஏப். 14-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

ஒசூா் 21-ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் 21-ஆவது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுமேற்கொண்ட மேயா், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிவா்த்தி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஒசூா் மாந... மேலும் பார்க்க