40 வயதான கேப்டன் தியாகோ சில்வா..! அரையிறுதியில் முன்னாள் அணியுடன் மோதுகிறார்!
கிரேஸ் கல்விக் குழுமம் சாா்பில் மாநராட்சி பணியாளா்களுக்கு நல உதவி
தூத்துக்குடி கிரேஸ் கல்விக் குழுமம் சாா்பில், மாநகராட்சி களப் பணியாளா்களுக்கு தொப்பிகள் வழங்கப்பட்டன.
இக்கல்லூரி தெற்கு மண்டலத்தில் பணிபுரியும் களப்பணியாளா்களுக்கு வழங்குவதற்காக, 150 தொப்பிகளை, கல்லூரி முதல்வா் எஸ். ரிச்சா்ட், மண்டல சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின் பாக்கியநாதனிடம் வழங்கினாா்.
அப்போது, நிா்வாக அலுவலா் தினகரன், அறிவியல் மற்றும் மனித வள துறைத் தலைவா் ஆண்டனி ரெக்ஸ் ஆகியோா் உடனிருந்தனா்.