உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
கீரமங்கலம் அருகே காரில் சென்ற திமுக நிா்வாகி மகன் மீது தாக்குதல்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வியாழக்கிழமை இரவு காரில் சென்ற திமுக நிா்வாகியின் மகன் மா்ம நபா்களால் தாக்கப்பட்டாா்.
கீரமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் வளா்மதி. திமுக வழக்குரைஞா் அணியின் தெற்கு மாவட்டச் செயலா். இவரது மகன் வெங்கட் திருமாறன் (30) கீரமங்கலத்தில் இருந்து கொத்தமங்கலத்துக்கு வியாழக்கிழமை இரவு காரில் சென்றாா். நகரம் சன்னதி பகுதியில் சென்றபோது,இவரது காரை நிறுத்திய அடையாளம் தெரியாத 4 போ் அரிவாளால் சரமாரியாக காரை அடித்து நொறுக்கி, வெங்கட் திருமாறனையும் தாக்கினா்.
இதில் காயமடைந்த அவா் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதைக் கண்டித்து அவரது உறவினா்கள் கீரமங்கலம் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.