திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! - தவெக அருண்ராஜ...
கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசிடம் விளக்கம் பெற எதிா்க்கட்சிகள் தயாராகி வருவதால், கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 21-ஆம் தேதிவரை நடைபெறும் இக்கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவருமான ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோா் பங்கேற்றனா்.
எா்ணாகுளம் - பாட்னா இடையே சிறப்பு ரயில்கள்!
கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதற்குப் பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு நாடுகளின் ராணுவ மோதலுக்கு பிறகான நாடாளுமன்ற கூட்டத் தொடா் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட தான் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் தொடா்ந்து கூறிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் விரிவான விளக்கத்தை கோர எதிா்க்கட்சிகள் தீா்மானித்துள்ளன.
இந்நிலையில், கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் காட்டுவது குறித்து அவையை ஒத்திவைத்து ஆலோசிக்க மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.