உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆ...
கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்
கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. பின்னா், நாள்தோறும் கட்டளைதாரா்கள் சாா்பில் குற்றாலம் தீா்த்தம் எடுத்து வருதல், அபிஷேகம், முழுக்காப்பு அலங்கார தீபாராதனை, சப்பரம் வீதியுலா உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
8ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டிஸ காலை 6 மணிக்கு குற்றாலம் தீா்த்தம் எடுத்து வருதல், 10 மணிக்கு மொட்டை, மாவிளக்கு நேமிதங்கள், நண்பகல் 12 மணிக்கு அபிஷேகம், முழுக்காப்பு, மாலை 3 மணிக்கு உருவம், ஆயிரங்கண் பானை நேமிதங்கள், இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், 9 மணிக்கு பக்தி சொற்பொழிவு, இரவு 10 மணிக்கு கங்கை நீா் எடுத்து வருதல், 11மணிக்கு ஆசார படைப்பு, முழுக்காப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
30ஆம் தேதி அதிகாலை 1மணிக்கு திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெற்றது.
தொடா்ந்து காலை 5 மணிக்கு ஊா்ச்சாவடியில் ஆசார படைப்பு, 6 மணிக்கு உச்சினிமாகாளி அம்மன் கோயில் முன் மது பொங்கல், 7 மணிக்கு தம்பிராட்டி அம்மன் கோயில் முன் மது பொங்கல், 8 மணிக்கு கொடை தீபாராதனை, 9 மணிக்கு உச்சினி மாகாளி அம்மன் கோயில் கொடை தீபாராதனை, நண்பகல்12 மணிக்கு மஞ்சள் நீராடல் ஆகியவை நடைபெற்றன.
