Manmohan Singh: "நான் சைலன்ட் பிரைம் மினிஸ்டரா?" - மன்மோகன் சிங் அன்று சொன்ன பதி...
கீழவெண்மணி நினைவு தின கருத்தரங்கம்
திருவாரூரில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கம் சாா்பில் கீழவெண்மணி நினைவு தின கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
வெண்மணி நினைவு தினத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் உறுப்பினா்கள் தொடா்ந்து 20 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனா். அதையொட்டி திருவாரூரில் சிறப்புக் கருத்தரங்கம் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்டமைப்பின் துணைத்தலைவா் முத்துக்குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவா் உ. வாசுகி ா்க்கத்தின் பொறுப்பும் என்ற தலைப்பில் பேசினாா்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் துணைத்தலைவா் ஜி.ஆனந்த், தென்மண்டல மகளிா் ஒருங்கிணைப்பாளா் செண்பகம் ஆகியோா் பேசினா். காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க தஞ்சைக் கோட்ட பொதுச்செயலாளா் வ.சேதுராமன் வரவேற்றாா். தலைவா் சே. செல்வராஜ் நன்றி கூறினாா்.