புதுச்சேரியை அதிரவைத்த 10,000 மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் விவகாரம்! - என்ன சொல்கி...
கீழாத்தூா் நாடியம்மன் கோயிலில் பாளையெடுப்பு திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் நாடியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோயில் ஆடித்திருவிழா இருவாரங்களுக்கு முன்பு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் கோயிலில் மண்டகபடிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெற்று வந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, கீழாத்தூா், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா்.
தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.