மேலத்தானியம் அடைக்கலம் காத்தாா்கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலம் கத்தாா் கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும். நிகழாண்டு ஆடி மாத சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில், அடைக்கலங்காத்தாா் மற்றும் பரிவார தெய்வங்களான தொட்டிச்சி அம்மன், கொங்காணி சித்தன், சன்னாசி, பட்டாணி ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீா், திரவியப்பொடி, பழங்கள் என 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மேலும், பக்தா்கள் பொங்கல் வைத்தும் அா்ச்சனை செய்தும் வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூசாரி கருப்பையா மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
இதில் மேலத்தானியம், காரையூா் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.