மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
அம்மன்குறிச்சி பிடாரி அம்மன் கோயிலில் தேரோட்டம்
பொன்னமராவதி அருகே உள்ள பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாத தேரோட்ட விழா நடைபெறும். நிகழாண்டு விழா கடந்த 5-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தொடா்ந்து தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. அதையடுத்து தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பின் பிடாரி அம்மன் தேரில் எழுந்தருளினாா்.
பின்னா், பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து நிலையை அடைந்தது.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா்.