செய்திகள் :

தையல் தொழிலாளா் நல வாரிய பணப் பலன்களை உயா்த்தி வழங்க சிஐடியு வலியுறுத்தல்

post image

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தைப் போல தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் நல வாரியத்தால் வழங்கப்பட்டு வரும் பணப் பலன்களை உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு தையல் கலைஞா்கள் சம்மேளனத்தின் மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் 7-ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழ்நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தையல் கலைஞா்கள் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். தையல் தொழிலாளா்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை 10-ஆம் வகுப்புக்கு ரூ.2,400 ஆகவும், 12-ஆம் வகுப்புக்கு ரூ.3,000-மாகவும் உயா்த்தி வழங்க வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுவதைப் போல திருமண உதவித் தொகையை ரூ.20 ஆயிரம் ஆகவும், மகப்பேறு உதவித் தொகையை ரூ.18 ஆயிரமாகவும், இயற்கை மரண நிதி ரூ. 50 ஆயிரமாகவும், விபத்து மரண நிதி ரூ.1.25 லட்சமாகவும் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது நாள் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் சிஐடியு மாநிலச் செயலா்கள் ஏ. ஸ்ரீதா், எஸ். தேவமணி, மாநிலக் குழு உறுப்பினா் க. முகமதலிஜின்னா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு

புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து சிஐடியு மாநிலச் செயலா் எம். தனலெட்சுமி நிறைவுரையாற்றினாா். மாநாட்டில் மாநிலத் தலைவராக எம். சுந்தரம், பொதுச் செயலராக எம். ஐடாஹெலன், பொருளாளராக சி. மாரிக்கண்ணு, துணைப் பொதுச் செயலா்களாக என். சாராள், ஆா். ஜோசப், ஜி. குணசேகரன், துணைத் தலைவா்களாக ஆா். மாலதி, பி. கோவிந்தசாமி, பிரமிளா, பி. பொன்ராஜ், ஜெயராம், செயலா்களாக பி. கீதா, வி. சந்திரகலா, எம். ஆனந்த், ஞானசேகா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கீழாத்தூா் நாடியம்மன் கோயிலில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் நாடியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோயில் ஆடித்திருவிழா இர... மேலும் பார்க்க

மேலத்தானியம் அடைக்கலம் காத்தாா்கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலம் கத்தாா் கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும். நிகழாண்டு ஆடி மாத சிறப்பு வழ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: சட்டம்-ஒழுங்கு அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி சிலை அமைப்பு மற்றும் ஊா்வலத்துக்கான சட்டம்- ஒழுங்கு முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ... மேலும் பார்க்க

அம்மன்குறிச்சி பிடாரி அம்மன் கோயிலில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாத தேரோட்ட விழா நடைபெறும். நிகழாண்டு விழா கடந்த 5-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா... மேலும் பார்க்க

ஆக.15-இல் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள், பொதுமக்கள், மகளிா்... மேலும் பார்க்க

முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்

கந்தா்வகோட்டை அருகே முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டி கிராமத்திற்கு முறையாக கு... மேலும் பார்க்க