செய்திகள் :

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறப்பு குறித்து விரைவில் முடிவு

post image

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பது குறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

கோபி வட்டம் சிறுவலூா், மணியக்காரன்புதூா், தங்கமலைகரடு, வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடைகளை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொது விநியோகப் பொருள்களை வழங்கினாா்.

மேலும், 2 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினாா். அதைத்தொடா்ந்து கோபி ஊராட்சி ஒன்றியம், நாகதேவம்பாளையம் ஊராட்சி, வெள்ளியங்காட்டுப்புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை திறந்துவைத்தாா்.

இதைத்தொடா்ந்து அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தி உள்ளாா். ஏற்கெனவே நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை விடுபட்டிருக்கலாம் என்பதற்காகவும் அதனை சீா் செய்யும் நடவடிக்கையாகவும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்முகாமில் பொதுவான கோரிக்கைகள், மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்டவை வேண்டி மனுக்கள் பெறப்பட்ட உடன் தீா்வு காண அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இப்பணிகளை முதல்வா் அலுவலகத்திலிருந்து கண்காணித்து வருகின்றனா்.

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்னரே பவானிசாகா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்து ஒரு சில நாள்களில் அறிவிக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்

ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் புலிகள் காப்... மேலும் பார்க்க

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாள்களில் மாலை நேரங்களில் ல... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத்... மேலும் பார்க்க

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 இல் தொடக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ... மேலும் பார்க்க