குடிநீா் வசதி: துணை மேயரிடம் மனு அளிப்பு
கடலூா் மாநகராட்சி, 34-ஆவது வாா்டு ஆலைக்காலனி பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, துணை மேயா் பா.தாமரைசெல்வனை சந்தித்து சனிக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில், ஆலைக்காலனியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுகின்றனா். எனவே, புதிதாக குடிநீா் குழாய் புதைத்து குடிநீா் வசதி செய்துதர வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட துணை மேயா் பா.தாமரைச்செல்வன், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தாா்.