ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் ...
குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மேட்டுப்பட்டி ஊராட்டியில் குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒன்றியம், மேட்டுப்பட்டி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்த ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக சரிவர குடிநீா் வழங்கவில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில், சனிக்கிழமை அங்குள்ள உத்தமபாளையம் - தேவாரம் மாநில நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமா்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற போடி காவல் துணை கண்காணிப்பாளா் சுனில், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி 10 நாள்களுக்குள் குடிநீா் சீராக விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.