செய்திகள் :

குடியரசுத் தலைவரை ராகுல் அவமதிக்கிறார்: பாஜக எம்.பி.

post image

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராகுல் காந்தி அவமதித்ததாக பாஜக எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 26) அரசியலமைப்பு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராகுல் காந்தி அவமதித்ததாக பாஜக எம்.பி. அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார். அரசியலமைப்பு தின விழா குறித்து அமித் மால்வியா பகிர்ந்த விடியோவில், தேசிய கீதம் இசைத்தபோது, அனைவரும் நேராகவும் கீழ் குனிந்தும் நின்றனர்; ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பக்கவாட்டில் திரும்பி நின்றார்.

குடியரசுத் தலைவரும் மற்ற தலைவர்களும் நின்று கொண்டிருந்தபோது, ராகுல் அமர முயற்சித்தது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராகுல் வரவேற்காமல் மேடையை விட்டு வெளியேறுவது ஆகிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

ராகுலின் இவ்வாறான செயல்கள் குறித்து அமித் மால்வியா கூறியதாவது, ``தேசிய கீதம் முடிந்ததும், மேடையில் இருந்த அனைவரும் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்; ஆனால், ராகுல் காந்தி மேடையைவிட்டு விலக முயற்சித்தார்.

காங்கிரஸ் எப்போதும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவமதிக்கிறது. ஏனென்றால், அவர்தான் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண். ராகுலும் அவரது குடும்பத்தினரும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.களை வெறுக்கிறார்கள் என்பது தெரிகிறது’’ என்று தெரிவித்தார்.

இருப்பினும், பாஜகவின் இந்த குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தியோ பிற காங்கிரஸ் தலைவரோ யாரும் இதுவரையில் பதிலளிக்கவில்லை.

இதையும் படிக்க:கார்கேவும் ராகுலும் செவ்வாய் கிரகம் சென்று விடுங்கள்: பாஜக

உ.பி.: சாலை விபத்தில் 4 மருத்துவா்கள் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள - ஆக்ரா விரைவுச் சாலையில் புதன்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில் உத்தர பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 4 மருத்துவா்கள், ஆய்வகப் பணியாளா் ஒருவா் என 5 போ் உ... மேலும் பார்க்க

ஆயுதக் கடத்தல்: உ.பி., பஞ்சாப், ஹரியாணாவில் என்ஐஏ சோதனை

இந்தியாவுக்குள் ஆயுதங்கள் கடத்தும் பயங்கரவாத கும்பல் தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக, பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. இது தொடா... மேலும் பார்க்க

மகாராஷ்டிர புதிய முதல்வா்: போட்டியிலிருந்து விலகினாா் ஷிண்டே

மகாராஷ்டிர முதல்வா் பதவிக்கான போட்டியிலிருந்து சிவசேனை கட்சித் தலைவா் ஏக்நாத் ஷிண்டே விலகினாா். ‘புதிய முதல்வரைத் தோ்வு செய்வதில் பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் முடிவுக்கு... மேலும் பார்க்க

சம்பல் வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை: மாநில அரசு தகவல்

உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு புதன்கிழமை தெரிவித்தது. சம்ப... மேலும் பார்க்க

ஹூப்ளி, பெலகாவியிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக கா்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் பெலகாவியில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளி: இரண்டாம் நாளிலும் முடங்கியது நாடாளுமன்றம்

தொழிலதிபா் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேச மாநில சம்பல் பகுதி வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்... மேலும் பார்க்க