அரிய வகை நோயுடன் போராடிய குழந்தை; மரபணு திருத்தச் சிகிச்சையால் காப்பாற்றிய அமெரி...
குடியரசுத் தலைவா் பதவியை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது: சிபிஎம் மாநிலச் செயலா் குற்றச்சாட்டு
குடியரசுத் தலைவா் பதவியை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் சண்முகம் குற்றம் சாட்டினாா்.
திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவையும், மக்களவையும் உயா்ந்தவை; மற்ற நிா்வாகப் பொறுப்பில் இருப்பவா்கள் உயா்ந்தவா்கள் இல்லை என திட்டவட்டமான தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறும்போது, மத்திய அரசின் சாா்பில் பங்கேற்ற வழக்குரைஞா்கள் என்ன கேள்விகள் எழுப்பினாா்களோ, அதையேதான் குடியரசுத் தலைவா் மூலமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பியுள்ளது.
இது ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மத்திய அரசு ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்தக் கூடிய நடவடிக்கையாக உள்ளது. குடியரசுத் தலைவா் பதவியை, தவறான முறையில் மத்திய அரசு பயன்படுத்துகிறது என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டு ஆகும் என்றாா்.