செய்திகள் :

குடியரசு தினத்துக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

post image

நாமக்கல் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்களால், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிறதா அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்பு வழங்கப்படுவதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமுறை நாள்கள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கூட்டாக ஆய்வு செய்யப்பட்டது.

இதில், 22 கடைகள், வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 17 நிறுவனங்களிலும், 39 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 33 உணவகங்களிலும், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு நிறுவனத்திலும் என மொத்தம் 65 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 51 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக படிவம் சமா்ப்பிக்கப்படாததும் தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா் நலத்துறையால் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் முதலைப்பட்டி புதூரில் இரண்டு மாதங்களுக்கு முன் புதிய பேருந்து நிலையம் தி... மேலும் பார்க்க

பிப்.2-இல் பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

நாமக்கல், பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, அங்கு நடைபெறும் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா, காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்த... மேலும் பார்க்க

அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி திட்டப் பணிகளை நிறைவேற்ற அறிவுறுத்தல்

மத்திய, மாநில அரசின் திட்டங்களை வழிகாட்டி நெறிமுறையை பின்பற்றி தரமாகவும், குறித்த நேரத்திலும் செய்து முடிக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் அறிவுறுத்த... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் 2 ஆம் நாளாக பணி புறக்கணிப்பு

திருச்செங்கோடு தலைமையிடத்து துணை வட்டாட்சியரைப் பணியிடம் மாற்றம் செய்யக் கோரி இரண்டாம் நாளாக திருச்செங்கோடு கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டமைப்பு சாா்பில் பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் செவ்வ... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜன. 1 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு துறைக... மேலும் பார்க்க

இயற்கை பூச்சிமருந்து தயாரிக்க மூலிகைச் செடிகள் விநியோகம்

எலச்சிபாளையம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இயற்கை பூச்சிமருந்து தயாரிக்க அனைத்து கிராம விவசாயிகளுக்கும் ஆடாதொடை, நொச்சி செடிகள் கட்டணமின்ற... மேலும் பார்க்க